Tamil cricket
LPL 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அசத்தல் வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்த டிம் செய்ஃபெர்ட்டும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பனுகா ராஜபக்ஷா ஒரு ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 28 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜனித் லியானகே - ஷஹான் ஆரச்சிகே இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இதில் லியானகே 13 ரன்களுக்கும், ஷஹான் 15 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Tamil cricket
-
ZIM vs IND, 5th T20I: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IND: இமாலய சிக்ஸருடன் புதிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை விளாசிய 7ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ...
-
TNPL 2024: சஞ்சய் யாதவ் அரைசதமடித்து மிரட்டல்; சேலம் ஸ்பார்டன்ஸுக்கு 199 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs NZW, 4th T20I: சாரா கிளென் அபாரம்; நியூசிலாந்தை மீண்டு வீழ்த்தியது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த யுவராஜ்; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ள நிலையில், அவரது அணியில் எம் எஸ் தோனி, சௌரவ் கங்குலி ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. ...
-
TNPL 2024: சச்சின், சுரேஷ் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது லைகா கோவை கிங்ஸ்!
Tamil Nadu Premier League 2024: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. ...
-
WCL 2024: பாகிஸ்தான் சம்பியன்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய சாம்பியன்ஸ்!
World Championship of Legends 2024: பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியின் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது - சிக்கந்தர் ரஸா!
இந்திய அணி பேட்டிங் செய்த விதத்தில் நாங்கள் 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார். ...
-
எனது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இப்போட்டியை இறுதிவரை களத்தில் இருந்து முடித்து கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47