When babar azam
AUS vs PAK: முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அந்த அணியில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on When babar azam
-
பாபர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - ஷான் மசூத்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பதற்கான அனைத்து தரமும் பாபர் ஆசாமிடம் உள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் - ரமீஸ் ராஜா!
பெரிய தொடர்கள் வரவிருப்பதால் பாபர் ஆசாமிற்கு ஓய்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கிறேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கேரி கிறிஸ்டன்!
பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கேரி கிர்ஸ்டன் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது ...
-
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை - பாக்., பயிற்சியாளர்!
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கமளித்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்ட ஃபகர் ஸமான்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விராட் கோலியுட ஒப்பிட்டு சக அணி வீரர் ஃபகர் ஸமான் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான் பாகிஸ்தான் அறிவிப்பு; பாபர், ஷாஹீன், நசீம் நீக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தானின் அடுத்த கேப்டனாக இவர்களை தேர்வு செய்யலாம் - யூனிஸ் கான் கருத்து!
பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக ஃபகர் ஸமான் அல்லது முகமது ரிஸ்வான் ஆகியோரை தேர்ந்தெடுக்கலாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமிற்கு வாழ்த்து கூறிய ஏபிடி வில்லியர்ஸ்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசாம் விலகியதை அடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47