icc champions trophy
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப்பெரும் அடி? வெறு இடத்திற்கு மாற்ற ஐசிசி திட்டம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அடிக்கடி களத்திலும் களத்திற்கு வெளியேயும் மோதி வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன.
அந்த வரிசையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 தொடர்களிலுமே பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் திரும்ப நடைபெற்றாலும் பாதுகாப்பு அம்சங்களில் குறைகள் இருப்பதாக கருதும் இந்தியா 2023 ஆசிய கோப்பையில் விளையாட தங்களுடைய அணியை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அதற்கு எங்கள் நாட்டுக்கு நீங்கள் வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
Related Cricket News on icc champions trophy
-
சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா வரவில்லை என்றால் இழப்பீடு வழங்க வேண்டும் - பாகிஸ்தன் கிரிக்கெட் வாரியம்!
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கிறதா இங்கிலாந்து?
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வாய்ப்பையும் இங்கிலாந்து இழக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று. ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24