team india
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ட்விட்டர் பதிவு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதும், ரஞ்சிக்கோப்பையில் அசத்தும் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது.
மேலும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் விராட் கோலி போன்ற முதன்மை அணியை தேர்வு செய்தது ஏன் என்றும் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி வரும் ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாமினிக்கா நகரில் இருக்கும் விண்ட்சோர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
Related Cricket News on team india
-
சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன் - பிரையன் லாரா!
இந்தியா உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. நாங்கள் முகாமை எங்கிருந்து தொடங்கினோம், தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்கின்ற வகையில் நாங்கள் சரியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்தேன் - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா நிறுத்துவார் என்று எதிர்பார்த்ததாக சுனில் கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் ...
-
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்கப்படாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் - திலக் வர்மா!
ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவது போல் கனவு காண்பேன் என்றும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் என்று திலக் வர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் விராட் கோலி; பயிற்சி போட்டியில் சொதப்பல்!
இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற்றுவரும் பயிற்சி போட்டியில் உனாத்கட் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது - ஹர்ஷா போக்ளே!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு போதிய பலத்துடன் இல்லை என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
திலக் வர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
ரிங்கு சிங்கின் வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
அஸ்வின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோலி; வைரல் காணொளி!
டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடிய காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ...
-
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். ...
-
WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47