Icc odi
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இத்தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் முதலிரண்டு போட்டிகளில் அரைசதமும், கடைசி போட்டியில் சதமும் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக பாபர் ஆசாம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதுடன், ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை.
Related Cricket News on Icc odi
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும் - கேன் வில்லியம்சன்!
முத்தரப்பு தொடரில் நாங்கள் விளையாடுவது எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு உதவும் என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், வீராங்கனையாக ஒமர்ஸாய், ஸ்மிருதி தேர்வு!
கடந்த 2024 ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாயும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் கைப்பற்றியுள்ளனர். ...
-
ஐசிசி சிறந்த ஒருநாள் அணி 2024: இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கான் வீரர்கள் ஆதிக்கம்!
2024 ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
சிறந்த ஒருநாள் வீரர் & வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
நடப்பாண்டு ஐசிசி சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதுகான பரிந்துரைப் பட்டியலை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பெயர் இடம்பிடித்துள்ளது. ...
-
விதிமுறையை மீறியதாக ஹென்ரிச் கிளாசெனுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஐசிசி விதிமுறைகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47