Indian cricket team
ஐசிசி தரவரிசை: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா; ஒருநாள், டி20 தரவரிசையில் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்தாண்டின் சர்வதேச கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் ஐசிசியின் சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. அதன்படி 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தையும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தையும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்தையும், 101 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
Related Cricket News on Indian cricket team
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். ...
-
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - மைக்கேல் வாகன் கணிப்பு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணி அறிவிப்பு; சாம்சன், ரிஷப், சஹாலிற்கு வாய்ப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற தனது கணிப்பை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு - ரசிகர்கள் மகிழ்ச்சி!
வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்து முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வுசெய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்; கோலி, தூபேவுக்கு இடமில்லை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா அணியை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தனது அணியில் விராட் கோலி, ஷிவம் தூபே, ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியைத் தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பதனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த அம்பத்தி ராயுடு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவுக்கு பிறகு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24