Pakistan t20 world cup
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இத்தொடரில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி என புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டு லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்வியே அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துள்ளது. அதுமட்டுமின்றி கேப்டன் பாபர் ஆசாமின் செயல்பாடுகளும் இந்த தொடரில் பெரிதளவில் இல்லாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் கேப்டன்ஸியில் எடுக்கும் முடிவுகள், பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், அவரது பேட்டிங் ஃபார்ம் என அனைத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது கேப்டன்சி குறித்த கேள்விகளும் வலுத்தன.
Related Cricket News on Pakistan t20 world cup
-
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயராகும் வகையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் முகமது அமீர்; பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்குமா?
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். ...
-
காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் காயம் காரணமாக நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இடம், நாள் & முழு போட்டி அட்டவணை!
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
கோலியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த மிரட்டல் சிக்ஸர்கள் குறித்து பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ஷமிக்கு அட்வஸ் வழங்கிய அஃப்ரிடி; ரசிகர்கள் விமர்சனம்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியை கிண்டலடித்த ஷோயப் அக்தருக்கு முகமது ஷமி தக்க பதிலடி கொடுக்க, அவருக்கு ஷாஹித் அஃப்ரிடி அறிவுரை கூறியுள்ளார். ...
-
தொடர் நாயகன் இவருக்கு கிடைத்திருக்க வேண்டும் - பாபர் ஆசாம்!
தாப் கான் இத்தொடரில் அதிரடியாக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நாம் அனைவரும் அதனைப் பார்த்தோம். அவருக்குத்தான் தொடர் நாயகன் விருதினை கொடுத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
ஷஹின் ஷா அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு ஸ்டோக்ஸ், ரஷித், மொயீன் அலி ஆகியோர் தான் காரணம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் - பென் ஸ்டோக்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை சோயப் அக்தரை ட்விட்டரில் கலாய்த்த முகமது ஷமி!
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் ட்விட்டர் பதிவுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47