Team england
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது பெயரில் சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Team england
-
விராட் கோலியி உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார் என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் மற்றும் 6000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் வரலாற்று சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய பும்ரா; வருண் சக்ரவர்த்திக்கு இடம்!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முகமது ஷமி!
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது இந்திய வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என இந்திய வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47