The asia cup
கோலி, ராகுல் பாகிஸ்தானில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரமீஸ் ராஜா!
2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நிறைய தோல்விகளை சந்தித்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன்பின் பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் போட்டிகளில் தோற்ற அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும், துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இறுதிப்போட்டிகளில் தோற்றது.
இந்த அனைத்து தோல்விகளுக்கும் சுமாரான பிட்ச் உருவாக்கியது முதல் சொதப்பலான அணி தேர்வு செய்தது வரை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் வாரிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஷ் ராஜா முக்கிய காரணமாக அமைந்ததால் கடந்த வாரம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க உங்களது நாட்டுக்கு வர முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்த நிலையில் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாங்களும் வரமாட்டோம் என்று அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
Related Cricket News on The asia cup
-
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானின் நடைபெறவில்லை என்றால் இது நடக்கும் - ரமீஸ் ராஜா எச்சரிக்கை!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
இந்தியா சொல்வதை கேட்டு நடக்கும்படி பாகிஸ்தான் வாரியத்திற்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அறிவுரை கூறியுள்ளார். ...
-
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார். ...
-
இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன்? ஜெஷ் ஷாவுக்கு அஃப்ரிடி கேள்வி!
டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதுவதற்கு முன்பாக இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன் என்று ஜெய் ஷா’வுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக பாகிஸ்தான் முடிவு?
இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய நிச்சயம் பாகிஸ்தான் சென்று விளையாடாது - ஜெய் ஷா!
பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, இந்தியா நிச்சயம் பாகிஸ்தானிற்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடாது என தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!
வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சிறந்த வீராங்கனை விருது இந்தியாவின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா!
மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரி இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்திய பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 65 ரன்களில் சுருண்டது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோடம்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதா இந்திய அணி?
15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: மைதானத்தில் குத்தாட்டம் போட்ட இலங்கை வீராங்கனைகள் - வைரல் காணொளி!
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இலங்கை அணி வீராங்கனைகள் மைதானத்தில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி; இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தாய்லாந்துக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47