Wi vs ind
SA vs IND, 2nd Test: ஐடன் மார்க்ரம் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Related Cricket News on Wi vs ind
-
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்; இணையத்தில் வைரலாகும் சச்சினின் பதிவு!
நேற்றைய போட்டியின் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். ...
-
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
இந்த பிட்ச்சில் 100 ரன்களை இலக்காக வைத்தாலே தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தை விளக்கிய சிராஜ்!
முதல் டெஸ்ட் போட்டி ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதை நினைத்து நான் இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
டீன் எல்கரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கரை இந்திய வீரர் விராட் கோலி கட்டியணைத்து வழியனுப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs IND, 2nd Test: கேப்டவுனில் விக்கெட் மழை; பேட்டர்கள் தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த இந்தியா!
ஒரு ரன் எடுப்பதற்குள்ளாக இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153/4 என்ற நிலையில் இருந்த 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா!
ஓப்பனிங் மற்றும் தமக்கு பிடிக்காத 3ஆவது இடத்திற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும், தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கு ஆதரவு கொடுப்போம் எனவும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது - டீன் எல்கர்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது. ...
-
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!
இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இரண்டாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா குணமடைந்துள்ளதால் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா அறிமுகப் போட்டியில் தடுமாறிய பிரசித் கிருஷ்ணா மீது நம்பிக்கை வைப்பதாக கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47