Yashasvi jaiswal
ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் இந்திய அணிக்கு இன்னும் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் விளையாடுவதற்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த சீசன் நன்றாக செயல்பட்டு இருப்பதால் வருகிற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் வாய்ப்புகள் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் பிசிசிஐ தலைமையில் பலரை கவர்ந்திருக்கிறது. ஆகையால் அவருக்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கொல்கத்தா அணிக்கு பினிஷிங்கில் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ஓரிரு போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுவதும் அந்த ரோலில் சிறப்பாக செயல்பட்டதால் வருகிற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து பரிசோதிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
Related Cricket News on Yashasvi jaiswal
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஜெய்ஸ்வாலுக்கு டிப்ஸ் கொடுத்த விராட் கோலி; வைரல் புகைப்படங்கள்!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
இந்த போட்டி இன்னும் விரைவிலேயே முடிந்திருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரமான அணி என்பதை காண்பித்து இருந்தாலும் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஜெய்ஷ்வால், ரிங்கு சிங்கின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
இந்த வருட ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது பற்றி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துளை தெரிவித்துள்ளார். ...
-
ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் - சுரேஷ் ரெய்னா!
நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
சீக்கிரம் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள் - ஜெய்ஸ்வால் குறித்து பிரெட் லீ!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறனைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
-
ஜெய்ஸ்வால் இந்திய அணியில் வாய்ப்பிற்கான கதவை தட்டவில்லை, உடைத்தெறிந்துள்ளார் - ஹர்பஜன் சிங்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் விரைவிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நான் எனது ஆட்டத்தில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தே இந்த எண்ணம் எனக்குள் உள்ளது. என்றாவது ஒருநாள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்பதுதான் அது என யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது - நிதிஷ் ராணா!
பார்ட் டைம் பந்துவீச்சாளரான நான் முதல் ஓவரை வீசி ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தேன். இதற்காக நான் நகர்த்தியக்காய் தோல்வியில் முடிந்து விட்டது என கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான அபார வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை புகழந்து தள்ளிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24