Ca karthik
தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 2022 டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலை பயிற்சிகளில் ஈடுபட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக சாதனை படைத்து இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
இருப்பினும் குறைகளை சரி செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடுவதற்காக இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதில் விளையாடும் 11 பேர் அணியை உறுதி செய்து விட்டதாக ஏற்கனவே கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ள நிலையில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு முதன்மை விக்கெட் கீப்பராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள இளம் வீரர் ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இதுவரை பெற்ற 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட அனைவரது மனதிலும் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
Related Cricket News on Ca karthik
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதி செல்ல இதனை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் பிரச்சனை இதுதான் - அஜய் ஜடேஜா!
குறைந்த ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்தால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்பதை அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
‘டிகே’ வால் பேட்டிங் வரிசையில் என்னுடைய இடத்திற்கே ஆபத்து வந்துவிட்டது : சூர்யகுமார் யாதவ்!
தினேஷ் கார்த்திக்கால் தமது இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே களமிறக்கியது ஏன் - ராகுல் டிராவிட் விளக்கம்!
தினேஷ் கார்த்திக்கிற்கு பினிஷிங் ரோல்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, இப்போட்டி முடிந்தப் பிறகு ராகுல் டிராவிட் விளக்கினார். ...
-
IND vs SA, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SA, 2nd T20I: அரைசதத்தை தியாகம் செய்த விராட் கோலி; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தனது அரைசதத்தையும் பொறுட்படுத்தாமல் விராட் கோலி செய்த காரியம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
தினேஷ் கார்த்தி - ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் விவகாரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய தகவலை கொடுத்துள்ளார். ...
-
தினேஷிற்கு பதிலாக பந்தை தான் களமிறக்க நினைத்தேன் - காரணத்தை விளக்கிய ரோஹித்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் ரிஷப் பந்தின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார். ...
-
மீண்டும் பினீஷராக மாறிய காரணத்தை விளக்கிய தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட, பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எனக்கு உதவினார்கள் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. ...
-
தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் யாருக்கு இடம்? - ஆடம் கில்கிறிஸ்ட் பதில்!
இந்திய அணியில் ரிஷப் பந்த் கண்டிப்பாக ஆடியே தீரவேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார். ...
-
தோனியின் அருமை இப்போது புரியும் - ரவி சாஸ்திரி!
தினேஷ் கார்த்திக் செய்த தவறு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, எம்எஸ் தோனியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடி கொடுக்கிறதா இந்திய அணி?
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்திய அணி நிர்வாகம் செயல்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
-
இந்திய அணி தேர்வை விமர்சித்த கம்பீர்; ரசிகர்கள் சாடல்!
இந்திய அணியின் பிளேயிங் லெவலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47