F4 indian
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்னர். இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கோப்பையுடன் வந்த இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திய இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
Related Cricket News on F4 indian
-
ரசிகர்கள் முன் நடனமாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா - வைரலாகும் காணொளி!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மைதானத்தில் நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிரதமர் மோடிக்கு பிரத்யேக ஜெர்ஸியை பரிசளித்த பிசிசிஐ!
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா அகியோர் இணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்ஸியை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். ...
-
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
கோப்பையை வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்ட சஞ்சு சாம்சன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ளார். ...
-
தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன்பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வான மகிழ்ச்சியில் தனது பாஸ்போர்ட் மற்றும் செல்போனை மறந்துவிட்டதாக ரியான் பராக் கூறிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் மீண்டும் மாற்றம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை காலை டெல்லி வந்தடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதியை மாற்றக் கோரும் ஐபிஎல் அணிகள்; குழப்பத்தில் பிசிசிஐ!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த ரிடென்ஷன் விதிமுறைகளை இறுதி செய்யும் பணியை பிசிசிஐ தொடங்கியுள்ளது. ...
-
முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் - ரியான் பராகிற்கு பதிலடி கொடுத்த ஸ்ரீசாந்த்!
தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என ரியான் பாராக் கூறிய நிலையில், முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பதில் கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவின் அழைப்பின் காரணமாகவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தோல்விக்கு பிறகும் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸில் இருந்து நாளை நாடு திரும்பும் இந்திய அணி வீரர்கள்!
புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸில் சிக்கிய இந்திய அணி வீரர்கள் நாளைய தினம் தனி விமானம் மூலம் இந்தியா திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24