In india
எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி ஷுப்மன் கில் 104 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் என ஆகியோரது சதத்தால் 5 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆகி தோற்றது.
இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “காயத்தில் இருந்து மீண்டதும் எனது மறுபிரவேசம் வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றும் வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த ஆட்டத்தில் அதை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது திறமை மீது எனக்கு சந்தேகம் கிடையாது. ஏனெனில் வலை பயிற்சியில் அருமையாக பேட்டிங் செய்தேன். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் எனது தொடக்கம் சிறப்பாக அமைந்தது.
Related Cricket News on In india
-
உலகக்கோப்பை 2023: நாளை மறுநாள் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி?
உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அந்நாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ...
-
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். ...
-
நல்ல ஃபார்மில் நீங்கள் இருக்கும் போது உங்களுடைய விக்கெட்டை பரிசளிக்க கூடாது - ஷுப்மன் கில்லிற்கு சேவாக் அட்வைஸ்!
கடந்த போட்டியில் தவற விட்ட சதத்தை இப்போட்டியில் ஷுப்மன் கில் அடித்துள்ளார். ஆனால் அவர் சதத்தை தாண்டி குறைந்தது 160 – 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd ODI: தொடலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக அக்ஸர் படேல் விலகியுள்ளார். ...
-
IND vs AUS, 3rd ODI: கடைசி போட்டியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவருக்கும் ஓய்வு கொடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது ...
-
எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது - தொடர் தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் சரியான ஒரு அணியை கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியில் நாம் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!
நான் இந்த போட்டியில் அதிக ரன்களை நாங்கள் குவிக்கும்போதே எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. அதனால் எங்களுடைய வேலை இன்று மிகவும் தெளிவாக இருந்தது என இந்திய அணி கெப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியிடமிருந்து மூன்றாவது இடத்தை திருடுவதற்கு வாய்ப்பே கிடையாது - ஸ்ரேயாஸ் ஐயர்!
விராட் கோலியிடமிருந்து அந்த மூன்றாவது இடத்தை திருடுவதற்கு வாய்ப்பே கிடையாது. என்னுடைய வேலை நான் தொடர்ந்து சீராக ரன்கள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd ODI: அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸி; தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபார பந்துவீச்சின் மூலம் டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸ்கோர் போர்டில் நாங்கள் வெல்லக்கூடிய ரன்களை கொடுத்து இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தப் போட்டியில் நான் உள்ளே நுழையும் பொழுதே எல்லா பந்துகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைத்தேன். அணியை சரியான நிலைக்கு கொண்டு வந்ததை உணர்கிறேன் என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
மைதானத்திற்கு வெளியே பறந்த சிக்சர்; கேஎல் ராகுல் அபாரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் மைதானத்திற்கு வெளியே அடித்த சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 2nd ODI: ஸ்ரேயாஸ், ஷுப்மன் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd ODI: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; சாதனை பட்டியல் இதோ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47