Indian cricket team
டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தாது. ஆனால் இறுதியில் இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Related Cricket News on Indian cricket team
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் கட்டாயம் இருக்க மாட்டேன் என்று கூறிய ஹர்திக் பாண்டியாவிற்கு தனது யூட்டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
இந்திய அணிக்கு மேலும் ஒரு அடி; 6 மதங்களை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ் ஐயர்!
அடுத்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவற்றிலிருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5 முதல் தொடக்கம்; 12 மைதானங்கள் தேர்வு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் என்றும், 12 மைதானங்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மிகப்பெரிய பிரச்சினைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - ஆரோன் ஃபிஞ்ச்!
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த முறை வெல்வது சற்று கடினம் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நான் ஏற்கவில்லை - விரேந்தர் சேவாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற தன்னை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஏற்கவில்லை என்றும் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ...
-
ராகுல் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டார் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். ரசிகர்களும் தற்போது அதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ...
-
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரிஷப் பந்தை நேரில் சந்தித்த யுவராஜ் சிங்!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வரும் ரிஷப் பந்தை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் நேரில் சந்தித்துள்ளார். ...
-
விராட் கோலி 110 சதங்களை அடிப்பார் - சோயிப் அக்தர்!
சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். ...
-
நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் ரிஷப் பந்த்; வைரல் காணொளி!
கார் விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் தனது சிகிச்சையின் ஒரு பகுதியாக நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் காணொளியை வெளியிட்டுள்ளார். ...
-
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் பிரித்வி ஷா ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி எடுத்துள்ள மோசமான முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்வுக்குழுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24