With dravid
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்னர். இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கோப்பையுடன் வந்த இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திய இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
Related Cricket News on With dravid
-
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவின் அழைப்பின் காரணமாகவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தோல்விக்கு பிறகும் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவைப் பற்றி தற்போது நான் என்ன சொன்னாலும் அது குறையாகிவிடும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
தேவைப்பட்டால் குல்தீப், சஹால் இருவரையும் விளையாட வைப்போம் - ராகுல் டிராவிட்!
ஒருவேளை குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க மிகவும் விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்!
உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட உங்களுக்கு வேறு எதும் பெரிய மரியாதை இல்லை என பயிற்சியாளர் பதவி குறித்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா புறப்பட்டது இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரு குழுக்களாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது. ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது - ரிக்கி பாண்டிங்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி வகிக்க தனக்கு விருப்பம் இருந்தாலும், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறாரா கௌதம் கம்பீர்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீரை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24