With kl rahul
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கன்னொலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கூப்பர் கன்னொலி ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்த கையோடு வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on With kl rahul
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று வடிவிலும் சேர்த்து அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ராகுல் சர்மா - காணொளி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் வீரர் ராகுல் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகம்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs இந்தியா - உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - கம்பீர் பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: அடுத்த சுற்று போட்டிகளில் விராட், ராகுல் பங்கேற்பதில் சிக்கல்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்று போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. \ ...
-
இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுலிற்கு ஓய்வளிக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ராகுலை க்ளீன் போல்டாக்கிய பாட் கம்மின்ஸ் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜெய்ஸ்வால் - ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் - முகமது கைஃப்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி - ராகுல் தான் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறி வந்த இந்திய அணி டெய்ல் எண்டர்ஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஃபலோ ஆனை தவிர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47