Eng vs ind
Unofficial Test Day 1: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; வலுவான நிலையில் இந்திய ஏ அணி
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது நார்த்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லையன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயர் பொறுப்புடன் விளையாடி விக்கெட இழப்பை தடுத்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களைக் கடந்தது.
Related Cricket News on Eng vs ind
-
ENG vs IND: இந்திய அணி லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கருண் நாயருக்கு இடமில்லை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து - இந்தியா தொடரில் ஜாம்பவான்களுக்கு கிடைத்த கவுரவம்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் பெயரை டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை என்று மாற்றி பிசிசிஐ மற்றும் இசிபி கவுரவித்துள்ளது. ...
-
நாங்கள் அவ்வளவு அனுபவமற்ற வீரர்கள் அல்ல - ஷுப்மன் கில்
ரோஹித் மற்றும் விராட் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், ஆனால் ஒரு அணியாக, எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான போட்டியை தவறவிடும் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
Unofficial Test: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
ENGL vs INDA, Day 3: மேக்ஸ் ஹோல்டன், டேன் மௌஸ்லி சதம்; முன்னிலை நோக்கி இங்கிலாந்து லையன்ஸ்!
இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து லையன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 527 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENGL vs INDA, Day 2: இரட்டை சதமடித்து அசத்திய கருண் நாயர்; வலிமையான நிலையில் இந்திய ஏ அணி!
இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து லையன்ஸ் அணி 320 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ENGL vs INDA, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் கருண் நாயர்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து லையனுஸுக்கு எதிரான போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலந்து டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய ஏ அணியில் இணையும் கேஎல் ராகுல்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணியில் கேஎல் ராகுலும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ...
-
இங்கிலாந்து லையன்ஸ் vs இந்தியா ஏ - அணிகள் மற்றும் நேரலை விவரங்கள்!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயன தொடர் அட்டவணை, நேரலை விவரங்கள், அணிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் திலீப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47