Indian cricket
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கம்பேக் கொடுக்கும் சஞ்சு சாம்சன்!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறு வயதிலேயே தனது திறமையை ஐபிஎல் தொடர் மூலம் வெளிப்படுத்தியவர். இதனால் கடந்த 2015ஆம் ஆண்டே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அணிக்காக 17 டி20 போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தோனி இருந்தவரை எந்த விக்கெட் கீப்பருக்கும் வாய்ப்பு கிடைக்காத சூழலில், தோனி ஓய்வை அறிவித்த பின்னரும் விக்கெட் கீப்பங்/ பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே கரோனா வைரஸ் பரவலின் போது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருந்தார். அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனால் சஞ்சு சாம்சனை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
Related Cricket News on Indian cricket
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்?
இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!
அடுத்த உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பத்தி ராயுடு . ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
WTC 2023-25: வெளியானது இந்திய அணியின் போட்டி அட்டவணை!
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தயாராகும் இந்தியாவின் லீக் சுற்று அட்டவணை வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உங்களது வீரத்தைக் காட்டுங்கள் - சுனில் கவாஸ்கர் சாடல்!
வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக இருப்பதால் வழக்கம் போல 3 வகையான தொடர்களிலும் உங்களது முரட்டுத்தனத்தை காட்டி வைட்வாஷ் வெற்றிகளை பெற்று சாதனைகளைப் படைத்து வீரத்தை காட்டுங்கள் என இந்திய அணியை சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரஹானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார். ...
-
ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து நான் கவலைப்பட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக இருந்தது - சவுரவ் கங்குலி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியே டெஸ்ட் கேப்டனாக இருக்க விரும்பாமல் விலகிக் கொண்டார். அது பிசிசிஐக்கு மிகப்பெரும் ஆச்சரியர்த்தை ஏற்படுத்தியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
எந்த ஒரு இந்திய வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை - சுனில் கவாஸ்கர்!
தற்போதைய காலத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
விராட் கோலி மாதிரியான கேப்டனை டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்கிறது - இயான் மோர்கன்!
விராட் கோலி மாதிரியான ஆக்ரோஷமான கேப்டனை இந்தியா மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டே மிஸ் செய்கிறது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளது. ...
-
வெளியானது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு? எப்போது நடத்தப்படும்? என்று பிசிசிஐ அட்டவணை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24